states

img

ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசுதியில் ஆய்வு செய்ய கோரிய இந்து அமைப்பின் மனுவை வாரணாசி நீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிலையை வழிபட அனுமதி கோரி, 5 பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் போன்ற உருவம் கண்டெடுக்கப்பட்டதாக புகைப்படங்கள் வெளியானது. இந்த சமயத்தில் சிவலிங்கத்தின் வயதை கண்டறிய கார்பன் சோதனை முறைக்கு உத்தரவிடகோரி இந்து அமைப்பினர் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, இன்று விசாரணைக்கு வந்த நிலையில், 5 இந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேபோல், கார்பன் சோதனை நடத்த வேண்டும் என்ற இந்து அமைப்பின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

;